செய்தி விளையாட்டு

கைவிட்டது மும்பை: கட்டியணைத்தது டெல்லி: மஹேலவுக்கு முக்கிய பொறுப்பு

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன, டெல்லி கேபிடல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன, டெல்லி கேபிடல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அணியின் கிரிக்கெட் செயற்பாடுகள் மற்றும் பல்வேறு சர்வதேச லீக்குகளில் பங்கேற்கும் அணிகளின் நிர்வாகப் பொறுப்புகளை அவர் கவனிக்கவுள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் இணை உரிமையாளரான GMR Sports, வெள்ளிக்கிழமை இந்த நியமனத்தை அறிவித்தது.

இதன்படி, இந்தியன் பிரீமியர் லீக் (IPL), மகளிர் பிரீமியர் லீக் (WPL), சர்வதேச லீக் T20 (ILT20), மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) மற்றும் The Hundred ஆகிய போட்டிகளில் பங்கேற்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளின் கிரிக்கெட் செயற்பாடுகளை மஹேல ஜயவர்தன மேற்பார்வையிடவுள்ளார்.

அத்துடன், மகளிர் பிரீமியர் லீக்கில் பங்கேற்கும் டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணியின் கிரிக்கெட் இயக்குநராகவும் அவர் பொறுப்பேற்கவுள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் இணை உரிமையாளரும், GMR Sports நிறுவனத்தின் தலைவருமான கிரண் குமார் கிரந்தி தெரிவிக்கையில், மஹேல ஜயவர்தனவின் நியமனம் அணிக்கு கூடுதல் அனுபவத்தையும் மூலோபாயத் தலைமையையும் வழங்கும் எனக் குறிப்பிட்டார்.

குறிப்பாக, மகளிர் கிரிக்கெட் அணியின் வளர்ச்சிக்கு இந்த நியமனம் பெரும் பங்களிப்பை வழங்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மகளிர் பிரீமியர் லீக்கில் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தி, தொடர்ச்சியாக கிண்ணத்தை வெல்லும் திறன் கொண்ட அணியை உருவாக்குவதே தமது இலக்கென அவர் தெரிவித்தார்.

நவீன கிரிக்கெட் குறித்த மஹேல ஜயவர்தனவின் புரிதலும், போட்டித்தன்மை கொண்ட அணிகளை உருவாக்குவதில் அவருக்கு உள்ள அனுபவமும் டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் என்றும், மகளிர் அணிகள் பங்கேற்கும் சர்வதேச லீக்குகளில் முன்னணி அணியாக உருவெடுக்க டெல்லி கேபிடல்ஸ் முயற்சித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மஹேல ஜயவர்தன, 2026 ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடர்வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றியிருந்தார். அதன் பின்னர், அந்த அணியுடனான அவரது ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.

சுவாரஸ்யமாக, டெல்லி கேபிடல்ஸ் அணியே மஹேல ஜயவர்தன வீரராக விளையாடிய கடைசி ஐ.பி.எல். அணியாகும். அவர் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் அந்த அணிக்காக விளையாடியிருந்தார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி