ஐரோப்பா செய்தி

பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் உறவுக்கு புத்துயிர் வழங்க முயற்சி

பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான உறவுகளை மீண்டும் சீரமைப்பதற்கான புதிய இணக்கப்பாடுகள் எட்டப்படவுள்ள நிலையில், இரு தரப்புக்கும் இடையே சில முக்கிய விடயங்களில் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான உறவுகளை மீண்டும் சீரமைப்பதற்கான புதிய இணக்கப்பாடுகள் எட்டப்படவுள்ள நிலையில், இரு தரப்புக்கும் இடையே சில முக்கிய விடயங்களில் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

இன்று (20) நடைபெறவுள்ள உச்சிமாநாட்டில், உணவு மற்றும் விவசாயப் பொருட்களின் வர்த்தகத்தை இலகுவாக்குதல், இளைஞர்களுக்கான வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், கார்பன் உமிழ்வு வர்த்தகத் திட்டங்களை ஒன்றிணைத்தல் உள்ளிட்ட விடயங்களில் இணக்கப்பாடுகளை எட்ட இரு தரப்பும் எதிர்பார்த்துள்ளன.

விலங்குகள், தாவரங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய உணவுப் பொருட்களின் வர்த்தகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பல சான்றிதழ்கள் மற்றும் சோதனைகளை நீக்குவதன் மூலம், பிரித்தானியப் பொருளாதாரத்துக்கு ஆண்டுக்கு 5.1 பில்லியன் பவுண்டுகள் வரை வருமானம் கிடைக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இரு தரப்பினரும் தங்களது கார்பன் உமிழ்வு வர்த்தகக் கட்டமைப்புகளை இணைக்கத் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் எஃகு உள்ளிட்ட பொருட்களுக்கு விதிக்கப்படும் கார்பன் எல்லை வரிகள் பரஸ்பரம் தவிர்க்கப்படலாம்.

இளைஞர்கள் மூன்று ஆண்டுகள் வரை மற்றொரு நாட்டில் கல்வி கற்கவும் வேலை செய்யவும் வாய்ப்பளிக்கும் திட்டத்துக்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. இதன்படி, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த தலா 100,000 இளைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், ஐரோப்பிய ஒன்றிய மாணவர்களுக்கு பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் விதிக்கப்படும் கல்விக் கட்டணம், ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளுடன் பிரித்தானியா எந்த அளவுக்கு இணங்கிச் செயற்பட வேண்டும் என்பன உள்ளிட்ட விடயங்களில் இரு தரப்புக்கும் இடையே முரண்பாடுகள் தொடர்கின்றன.

ஐரோப்பிய ஒன்றிய மாணவர்களுக்கு உள்நாட்டு மாணவர்களுக்கான கட்டணத்தை அறவிட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தும் நிலையில், பிரித்தானியா அதற்கு முழுமையான இணக்கத்தைத் தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்தை ஆறு மாதங்களுக்குள் தீர்க்க இரு தரப்பும் இலக்கு வைத்துள்ளன.

பிரெக்சிட்டுக்குப் பின்னர் சுமார் ஒரு தசாப்த காலமாக நீடித்த அரசியல் மற்றும் வர்த்தக முரண்பாடுகளைத் தணித்து, பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியம் இரு தரப்பினரிடமும் அதிகரித்துள்ளமை இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி