இலங்கை

இலங்கையில் தேர்தலில் போட்டியிடும் ஜெர்மனிய பெண்

இலங்கையில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஜெர்மனியை சேர்ந்த பெண்ணொருவர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

அதற்கமைய மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெர்மன் நாட்டவர் ஒருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்று தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜேர்மன் பெண் ஒரு சுயேச்சைக் குழுவின் வேட்பாளராக கலேவல பிரதேச சபைக்கு போட்டியிட உள்ளார்.

வைப்புத்தொகையை செலுத்திய பின்னர், இலங்கையில் மாற்றங்களைக் கொண்டுவரும் நம்பிக்கையுடன் தான் போட்டியிடுவதாக ஜெர்மன் பெண் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்