இன்றைய முக்கிய செய்திகள் மத்திய கிழக்கு

காசா போர் நிறுத்தத் திட்டம்! ட்ரம்ப், நெதன்யாகு இணக்கம்

காசா பகுதியிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான புதிய அமைதித் திட்டத்தை அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஒப்புக்கொண்டுள்ளனர்.

அதை ஹமாஸூம் ஏற்றுக்கொள்ளுமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ​இந்தத் திட்டம் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

ஹமாஸினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள உயிருடன் உள்ள 20 இஸ்ரேலிய பணயக்கைதிகளையும், இறந்ததாக கூறப்படும் பலரது எச்சங்களையும் 72 மணி நேரத்திற்குள் விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறு விடுவித்தால் இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான காசா மக்கள் விடுவிக்கப்படுவார்கள் என நம்பப்படுகிறது. ​

போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளின் போது ஹமாஸூக்கு வெள்ளை மாளிகையின் 20-அம்ச திட்டம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. ​

காசாவை நிர்வகிப்பதில் ஹமாஸுக்கு எந்தப் பங்கும் இருக்காது என்றும் அதில் கூறப்பட்டுள்ள நிலையில் பாலஸ்தீன அரசுக்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.