ஐரோப்பா

ஹமாஸிற்கு ஆதரவளிக்கும் ஈரான் ஜனாதிபதிக்கு பிரான்ஸ் ஜனாதிபதி கடும் எச்சரிக்கை

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஈரான் அரசை எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் காஸா யுத்தத்தில், இஸ்ரேல் மேற்கொள்ளும் எந்த ஒரு விரிவாக்கத்துக்கும், நீடிப்புக்கும் எதிராக ஈரான் செயற்படக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தத்தில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயற்படும் ஈரான், அப்படைக்கு ஆயுதங்களையும், இன்னபிற உதவிகளையும் வழங்கி வருகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஈரான் ஜானாதிபதி Ebrahim Raïssi உடன் தொலைபேசியில் உரையாடிய மக்ரோன், மோதலை அதிகரிக்கும் விதமாக செயற்படுவதை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத அமைப்பால் பிடிக்கப்பட்ட பிணைக் கைதிகளில் பிரெஞ்சு ஆண்களும் பெண்களும் அடங்குவர். அவர்களை மீட்பதே பிரான்சுக்கு முழுமையான முன்னுரிமையாகும் என மக்ரோன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஈரானில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு பிரெஞ்சு பிரஜைகளின் நிலைமை குறித்த தனது அக்கறையை மீண்டும் வலியுறுத்தியதுடன், அவர்களை உடனடியாக விடுவிக்குமாறும் மக்ரோன் கோரினார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்