ஐரோப்பா

ரஷ்யாவின் தேடப்படும் நபர்கள் பட்டியில் பிரிட்டனின் முன்னாள் அமைச்சர்!

பிரித்தானியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸை ( Ben Wallace) ரஷ்யா தேடப்படும் நபர்கள் பட்டியலில் சேர்த்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்கு முன்பிருந்து ஆகஸ்ட் 2023 வரை வாலஸ் பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றினார்.

அவர் பணியில் இருந்தபோது உக்ரைனுக்கு அதிகளவிலான இராணுவ உதவிக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். அத்துடன் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பையும் கண்டித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த அக்டோபரில், கிரிமியா குறித்து வாலஸ் தெரிவித்த கருத்துகளுக்காக, அவரை சர்வதேச தேடப்படும் நபர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஒரு பிராந்திய ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்  கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ரஷ்யா தற்போது அவரை தேடப்படும் நபர்கள் பட்டியலில் சேர்த்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!