உலகம்

பாலைவனத்தில் வெள்ளப்பெருக்கு – சீன மக்களுக்கு எச்சரிக்கை!

காலநிலை மாற்றம் காரணமாக  இந்த கோடைக்காலப் பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவின் மிகப்பெரிய பாலைவனமான சின்ஜியாங்கின் தக்லமக்கானில்  (Taklamakan)  இந்த ஆண்டின் முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து இன்று இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2021 முதல் தக்லமக்கான் பாலைவனத்தில் இதேபோன்ற வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டிருந்தாலும், அவை பொதுவாக வெப்பநிலை உச்சத்தில் இருக்கும் ஆகஸ்ட் மாதத்தில் நிகழ்கின்றன.

ஆனால் இம்முறை முன்கூட்டியே ஏற்பட்டுள்ளன. ரொய்ட்டர்ஸ் காலநிலை கண்காணிப்பு அறிக்கையின்படி, ஜூன் 12 அன்று, சின்ஜியாங்கில் வெப்பநிலை  7.3 டிகிரி   அதிகரித்து, 38 டிகிரி செல்சியஸ் (100 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பநிலையை எட்டியது.

மேற்கு மற்றும் தெற்கு சின்ஜியாங்கிலும் சமீபகாலமாக அடிக்கடி மழை பெய்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்