இலங்கை செய்தி

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் தீ விபத்து

எரிவாயு கசிவால் எரியத் தொடங்கிய தீ, எதிர்பாராதவிதமாகத் தொழிற்சாலை வளாகத்தில் தங்கியிருந்த இராணுவத்தினரின் தங்குமிட பகுதிக்கும் மிக வேகமாகப் பரவியுள்ளது.

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் இன்று (24) மாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் சொத்துக்களுக்குப் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும் புகை மண்டலமாக மாறியுள்ளது.

நீண்டகாலமாகச் செயலற்றுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் உள்ள பழைய இரும்புகளை அகற்றும் பணி, தற்சமயம் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இப்பணிகள் இன்று மாலையும் வழமை போல் இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம், இரும்புகளை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட சிலிண்டரின் எரிவாயுவில் ஏற்பட்ட திடீர் கசிவு காரணமாக இந்த விபரீத தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

எரிவாயு கசிவால் எரியத் தொடங்கிய தீ, எதிர்பாராதவிதமாகத் தொழிற்சாலை வளாகத்தில் தங்கியிருந்த இராணுவத்தினரின் தங்குமிட பகுதிக்கும் மிக வேகமாகப் பரவியுள்ளது.

இதனால், அங்கு வைக்கப்பட்டிருந்த இராணுவப் பணியாளர்களின் உடைகள், மெத்தைகள் மற்றும் பாதுகாப்புப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்த பகுதிகள் தீக்கிரையாகியுள்ளன.

இதன் காரணமாகப் பெரும் தீச்சுவாலை ஏற்பட்டு, காங்கேசன்துறை வான்பரப்பு முழுவதும் கரும் புகை மண்டலமாகச் சூழ்ந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்து குறித்து உடனடியாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த யாழ். மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்புப் படையினர், இராணுவத்தினருடன் இணைந்து தீயை மேலும் பரவவிடாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காங்கேசன்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை