தெற்கு லெபனானில் இருந்து படைகளை மீளப்பெறமாட்டோம்- இஸ்ரேல் திட்டவட்டம்
அமெரிக்கா கோரிக்கை விடுத்தாலும் லெபனானின் தெற்குப் பகுதியிலிருந்து ராணுவத்தை வெளியேற்றப் போவதில்லை என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் Israel Katz , திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான பாதுகாப்பு அனுபவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, ராணுவப் பாதுகாப்பு மண்டலத்தை பராமரிப்பது அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தெற்கு லெபனானில் இருந்து இடம்பெயர்ந்த சுமார் இரண்டு லட்சம் மக்கள் மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்ப முடியாது என்பதை அவரது கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.
தனது வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எவ்வித வெளிநாட்டு அழுத்தங்களுக்கும் பணியாமல் போரைத் தொடர இஸ்ரேல் முடிவெடுத்துள்ளது.




