இலங்கை செய்தி

புதையல் தோண்டும் ஸ்கேன் இயந்திரத்துடன் 8 பேர் கைது

புதையல் தோண்டும் ஸ்கேன் இயந்திரத்துடன் வேனில் பயணித்த எட்டு சந்தேக நபர்களை திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். ai image

புதையல் தோண்டும் ஸ்கேன் இயந்திரத்துடன் வேனில் பயணித்த எட்டு சந்தேக நபர்களை திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் பயணித்த வேனில் புதையல் கண்டறியும் ஸ்கேன் இயந்திரம் மற்றும் பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கைத்துறை முகத்துவாரம் (லங்காப்பட்டுண) சந்தியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திக்கு பயன்படுத்தப்பட்ட படம் – AI

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை