செய்தி பொழுதுபோக்கு

வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்ட ஃபைட்டர் திரைப்படம்

‘பேங் பேங்’, ‘வார்’ படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சித்தார்த் ஆனந்த் மற்றும் ஹிருத்திக் ரோஷன் இணைந்துள்ள திரைப்படம் ‘ஃபைட்டர்'(fighter).

இந்த படத்தில் ஷாம்ஷெர் பத்தானியா என்கிற கதாபாத்திரத்தில் இந்திய விமானப்படையின் சிறப்பு பணி குழுவின் படைத்தலைவராக ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் தீபிகா படுகோன், அனில் கபூர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் நாளை (ஜனவரி 25) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வான்வழியில் ஆக்ஷன், திரில்லர் காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள ‘ஃபைட்டர்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வளைகுடா நாடுகளில் ‘ஃபைட்டர்’ திரைப்படம் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைக்கான காரணம் இது வரை வெளியிடப்படவில்லை.

ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்சில் மட்டும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி