ஐரோப்பா

நிலப்பரப்பை விட்டுக் கொடுத்தால் நேட்டோவில் வாய்ப்பு – உக்ரைனுடன் டீல் பேசும் அமெரிக்கா

உக்ரைன் ரஷ்யாவுக்கு நிலப்பரப்புகளை விட்டுக் கொடுத்தால் நேட்டோவில் சேரலாம் என அமெரிக்க அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முட்டுக்கட்டையை உடைப்பதற்காக, ஜாரெட் குஷ்னர் Jared Kushner, இந்த முன்மொழிவை உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளிடம் நேரடியாக முன்வைத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

சீனாவில் நடந்த ஏபெக் உச்சிமாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர்ம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து இவ்வாறான கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஐரோப்பிய அதிகாரிகளிடம் உக்ரைனுக்கான நிதி உதவியை குறைக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.

இந்த கோரிக்கை ஐரோப்பிய தலைவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் மேற்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் உக்ரைன் தனது நிலத்தின் ஒரு பிடி மண்ணைக்கூட ரஷ்யாவிற்கு விட்டுக்கொடுக்காது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்