ஐரோப்பா

ஸ்பெயினில் வங்கி வரியை நீட்டிக்க தீர்மானம் – வீட்டு வசதி நெருக்கடிக்கு நிதியளிக்க நடவடிக்கை

ஸ்பெயினில் வங்கி வரியை நீட்டிக்க தீர்மானம் - வீட்டு வசதி நெருக்கடிக்கு நிதியளிக்க நடவடிக்கை

ஸ்பெயினில் வீட்டுவசதி திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக தற்போதைய வங்கி வரியை 2027 வரை நீட்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கொள்கை தீர்மானத்தில் தனது அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் எனபிரதமர் பெட்ரோ சான்செஸ் இன்று அறிவித்தார்.

வங்கி வரியை நீட்டிப்பதன்மூலம் €1.4 பில்லியன் வருவாய் ஈட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருவாயை முழுமையாக சமூக வீட்டுவசதி கட்டுமானம், குத்தகைதாரர்களுக்கான வரிச் சலுகைகள் மற்றும் வீடுகளைப் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கு பயன்படுத்தவுள்ளதாக அவர் மேலும் அறிவித்தார்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க குடிமக்களுக்கு உதவும் வகையில், 2024 டிசம்பரில்,   வங்கி  வருவாய் வரியை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்திருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்