செய்தி விளையாட்டு

இங்கிலாந்து அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ் ஓய்வை அறிவித்தார்

இங்கிலாந்து அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹேல்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

34 வயதான அலெக்ஸ் ஹேல்ஸ், இங்கிலாந்துக்காக டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என மொத்தம் 156 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு கிடைத்த வெற்றியுடன் அவர் ஓய்வை அறிவித்துள்ளார்.

லீக் போட்டிகளில் பங்கேற்கும் வகையில், தாம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

70 T20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2000 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 70 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 2419 ஓட்டங்களை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கோப்பையை வென்ற அணியை அலெக்ஸ் ஹேல்ஸ் பிரதிநிதித்துவப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி