நேபாளத்திற்கு 1.62 பில்லியன் டொலர் பெறுமதியான பொருளாதார உதவி – இந்தியா அறிவிப்பு
நேபாளத்திற்கு 1.62 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பொருளாதார உதவியை வழங்கவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. நேபாள பிரதமர் பலேந்திர ஷாவை டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த உதவி தொகுப்பை அறிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மோடி, “நேபாளத்தின் புனரமைப்பு மற்றும் நீண்டகால வளர்ச்சிக்கு புதிய உத்வேகம் அளிக்கும் வகையில், 24,000 கோடி (240 பில்லியன்) நேபாள ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி ஒத்துழைப்புத் திட்டத்தை இன்று நாங்கள் அறிவிக்கிறோம்,” என்றார். […]



