இலங்கை

யாழில் போதை கும்பலின் ஒன்றுகூடல் மையங்களாக மாறி வரும் பாழடைந்த வீடுகள்

யாழ்ப்பாணம் நகர் பகுதி, மற்றும் புறநகர் பகுதிகளில் ஆட்கள் அற்ற வீடுகளில் ஒன்று கூடும் போதைக்கு அடிமையானவர்கள் , அந்த வீடுகளில் இருந்து போதையை நுகர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆட்கள் அற்று , பாழடைந்த வீடுகளில் மாலை வேளைகளில் ஒன்று கூடும் போதைக்கு அடிமையான கும்பல்கள் , அந்த வீடுகளில் கும்பல் கும்பலாக போதை பொருட்களை நுகர்ந்து கொள்கின்றனர்.

அவர்கள் வீடுகளுக்குள் இருந்து பெரும் குரல் எழுப்பி சத்தங்களையும் எழுப்புவதனால் , அவ்வீடுகள் அமைந்துள்ள வீதிகளால் பயணிப்போர் அச்சத்துடனையே பயணிக்கின்றனர்.

யாழில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வரும் நிலையில் , ஊசி மூலம் போதைப்பொருளை உட்செலுத்தி கொள்வர் , அதிகளவில் போதையை உட்செலுத்துவதாலும், தொடர்ந்து போதையை நுகர்வதால் கிருமி தொற்றுக்கு இலக்காகியும் உயிரிழப்புக்கள் ஏற்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளமையால் ,சந்தேகத்திற்கு உரிய இடங்களில் பொலிஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்