பொழுதுபோக்கு

அட்ராசக்க… தீபிகா படுகோனுக்கு வலை வீசும் STR!! விரைவில் விருந்து காத்திருக்கின்றது

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள STR 48 படத்தை தேசிங் பெரியசாமி இயக்குகிறார்.

பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சிம்பு ஜோடியாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் தீபிகா படுகோனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களில் மிரட்டிய சிம்புவுக்கு, STR 48 திரைப்படம் மிகப் பெரிய ஜாக்பாட்டாக அமைந்துள்ளது.

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவிருந்த படத்தில் சிம்பு கமிட் ஆகியுள்ளார்.

அதேநேரம் STR 48 படத்தின் நாயகி, மற்ற நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர், டெக்னீஷியன் டீம் குறித்து இன்னும் அப்டேட் வெளியாகவில்லை. இது அனைத்துமே படப்பிடிப்பு தொடங்கும் போது அறிவிக்கலாம் என படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

முக்கியமாக சிம்புவுக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்பட்டது. இதில் முதலில் த்ரிஷாவின் பெயர் தான் அடிபட்டது. ஆனால், தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் தீபிகா படுகோன் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது.

STR 48 படத்தின் ஸ்கிரிப்ட்டுடன் தீபிகா படுகோனேவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இதனால், விரைவில் இதுகுறித்து அபிஸியல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்