ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவு செலவு திட்டம் தொடர்பில் விவாதம் – முரண்பட்டுநிற்கும் தலைவர்கள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் 2028 முதல் 2034 ஆம் ஆண்டு காலப்பகுதி வரையிலான வரவு செலவு திட்டத்தின் முன்மொழிவு தொடர்பான விவாதம் இன்று நடைபெறவுள்ளது.

ஏறக்குறைய €1.6 டிரில்லியன்  மதிப்பிலான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவு தொடர்பாக, கூட்டணியின் உறுப்பினர்கள் விவாதிக்கவுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரான அன்டோனியோ கோஸ்டா, டிசம்பர் மாதத்தின் இறுதிக்குள் ஒரு உடன்பாட்டை எட்ட முயற்சித்து வருகிறார்.

இருப்பினும் கூட்டணி உறுப்பினர்கள் உக்ரைனுக்கான நிதியுதவிக்கு பாரிய தொகை ஒதுக்கப்பட்டிருப்பதுடன் முரண்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக தங்களது உள்நாட்டு பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதில் அவர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தலைவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது,

இதற்கிடையே பிரான்ஸ், இத்தாலி, போலந்து, கிரீஸ், எஸ்டோனியா, பின்லாந்து மற்றும் ஸ்லோவாக்கியாவில் தேர்தல்கள் நடைபெற உள்ளதால், இந்த வரவு செலவு திட்டம் ஒவ்வொரு நாடுகளுக்கும் முக்கியமான ஒன்றாகவும் காணப்படுகிறது.

இந்த வாரம் கோஸ்டா முன்வைத்த சமீபத்திய திட்டத்தின்படி, ஏழாண்டு பட்ஜெட்டின் மொத்த மதிப்பு €1.582 டிரில்லியன் ($1.74 டிரில்லியன்) ஆகும். இதில், பெருந்தொற்று காலக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக €140 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏழ்மையான பகுதிகள் பணக்காரப் பகுதிகளுக்கு இணையாக முன்னேற உதவவும் சுமார் €740 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது, இதுவே இதில் உள்ள மிகப்பெரிய செலவினமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம் இன்றைய விவாதத்தில் உக்ரைனுக்கு நிதியளிப்பது தொடர்பிலும் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்