இலங்கை செய்தி

பிரபாகரனின் பிறந்தநாள்: யாழில் கேக் வெட்டி கொண்டாட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72ஆவது பிறந்த தினமான இன்று வியாழக்கிழமை, அவர் சிறுவயதில் வாழ்ந்த வல்வெட்டித்துறை, ஆலடி வீதியிலுள்ள அவரது பூர்வீகக் காணியில் பிறந்தநாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72ஆவது பிறந்த தினமான இன்று வியாழக்கிழமை, அவர் சிறுவயதில் வாழ்ந்த வல்வெட்டித்துறை, ஆலடி வீதியிலுள்ள அவரது பூர்வீகக் காணியில் பிறந்தநாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனை முன்னிட்டு அந்தக் காணி மற்றும் ஆலடி வீதி ஆகிய பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட்டு, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இன்று முற்பகல் 10 மணிக்குக் கேக் வெட்டப்பட்டுப் பிறந்தநாள் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72ஆவது பிறந்த தினத்தையொட்டி வடக்கு – கிழக்கு, தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் பிறந்தநாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வல்வெட்டித்துறை ஆலடியில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வில் இரண்டு கேக்குகள் வெட்டப்பட்டு, வருகை தந்திருந்தவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. அத்துடன், 72ஆவது பிறந்த தினத்தைக் குறிக்கும் வகையில் 72 எள்ளுப்பாகு உள்ளிட்ட சிற்றுண்டிகளும், இனிப்புப் பண்டங்களும் வழங்கப்பட்டன.

அதேசமயம், பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்களும், நிகழ்வில் பங்கேற்றவர்களுக்குப் பயன்தரு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் அந்தப் பகுதிப் பொதுமக்கள், தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதனிடையே, தலைவர் பிரபாகரனின் பூர்வீக இல்லம் அமைந்துள்ள காணியின் மதிலில், “தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் வாழ்ந்த இல்லம்” எனப் பொறிக்கப்பட்ட புதிய பதாகையும் அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகை சேதப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய பதாகை நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், அச்சுறுத்தல்கள் நிலவிய காலகட்டங்களில் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட அரசியல்வாதியுமான எம். கே. சிவாஜிலிங்கம் அவ்விடத்தில் கேக் வெட்டிப் பிறந்தநாள் நிகழ்வுகளை முன்னெடுத்து வந்திருந்தமையும் இவ்வேளையில் நினைவுகூரப்பட்டது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை