இலங்கை செய்தி

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் ஆபத்தானதா?

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை குறித்து, நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாகவே அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலமானது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் போன்று பாரதூரமானதல்ல. கைது செய்யப்படும் நபர்களின் அடிப்படை உரிமைகளுக்கு அது எவ்விதத்திலும் அச்சுறுத்தலாக அமையாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன்போது, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் காரணமாக ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இல்லாமல் போகக்கூடும் என எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் கருத்துகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் பல வருடங்களாகவே கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதனை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை, அரசைப் பாதுகாப்பதற்கும் ஒரு சட்டம் அவசியமாகும்.

கைது செய்யப்படும் நபர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் இந்தச் சட்டமூலத்தில் உள்ளன. இது நீதிமன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சட்டமூலமாகும். எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் போன்று இது பாரதூரமானதல்ல.

மறுபுறத்தில், திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்காகவே ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நாட்டுக்கு எந்தவொரு சட்டமும் தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்து சிலர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இது ஏற்புடையதல்ல” என்றார் அமைச்சர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை