விளையாட்டு

CWC – 246 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்த வங்காளதேசம்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

வங்காளதேச அணியின் துவக்க வீரரான லிட்டன் தாஸ் ரன் ஏதும் அடிக்காமல் பெவிலியன் திரும்பினார். இவருடன் ஆடிய தன்சித் ஹசன் தமீம் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இவரை தொடர்ந்து களமிறங்கிய மெஹிதி ஹசன் மிராஸ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷகிப் அல் ஹாசன் 40 ரன்களையும், முஷ்ஃபிகுர் ரஹிம் 66 ரன்களையும் குவித்தனர்.

போட்டி முடிவில் வங்காளதேசம் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்களை குவித்துள்ளது. நியூசிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய லோக்கி பெர்குசன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இவரை தவிர டிரெண்ட் போல்ட், மேட் ஹெண்ரி தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

மிட்செல் சாண்ட்னர் மற்றும் கிலென் பிலிப்ஸ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

(Visited 6 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content