அறிந்திருக்க வேண்டியவை

தங்கத்தை குவித்து வைத்திருக்கும் நாடுகள் – முதலிடத்தை தக்க வைத்த அமெரிக்கா

தங்கத்தை கையிருப்பாக வைத்திருக்கும் உலக நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

தங்கத்தை கையிருப்பாக கொண்டிருப்பது வீட்டுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் நல்லது. ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில், தங்கத்தின் கையிருப்பு முக்கிய பங்கு வகிக்கிறது, குறிப்பாக நிதி நிச்சயமற்ற காலங்களில் நம்பகமும் மதிப்பும் கொண்ட சேமிப்பாக தங்கம் செயல்படுகிறது.

1800களின் பிற்பகுதியில் படிப்படியாக உலக நாடுகளின் மத்தியில் இந்த நடைமுறை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. தங்கள் நாட்டு கரன்சியின் மதிப்பை குறிப்பிட்ட அளவு தங்கத்தின் மதிப்புடன், நிலையான மாற்று விகிதமாக நிர்ணயித்து இணைப்பதன் மூலம் அந்த நாடு தீர்மானிக்கிறது. அதாவது அச்சடித்து வெளியிடப்படும் ஒவ்வொரு அலகு கரன்சியும், அதற்கு சமமான தங்கத்தின் மதிப்பைக் கொண்டுள்ளது எனலாம்.

அண்மைக்காலமாக சர்வதேச அளவில் வளர்ந்து வரும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக, நாடுகள் மத்தியில் தங்க இருப்புக்கான தேவை அதிகரித்து வருகிறது. நாடுகளின் மத்திய வங்கிகள் எப்போதும் தங்கத்தை முதன்மையான மற்றும் பாதுகாப்பான சொத்தாகக் காட்டுகின்றன. நவீன பொருளாதாரத்தின் அளவுகோல்கள் எப்படி மாறினாலும், தங்கத்தின் இருப்பு ஒரு நாட்டின் கடன் தகுதி மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார நிலையை பாதிக்கும் கருவியாக உள்ளது.

சர்வதேச அளவில் தங்கத்தை அதிகம் கையிருப்பில் வைத்திருக்கும் டாப் 10 நாடுகளின் பட்டியலில், பெரும்பாலானோரின் கணிப்பின்படியே 8,1336.46 டன்கள் தங்கத்துடன் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. அடுத்த இடங்களில் ஜெர்மனி (3,352.65 டன்), இத்தாலி (2,451.84 டன்), பிரான்ஸ் (2,436.88 டன்), ரஷ்யா (2,332.74 டன்) ஆகியவை டாப் 5 இடங்களை முறையே பிடித்துள்ளன.

இந்த வரிசையில் இந்தியாவின் அண்டை தேசமான சீனா 2,191.53 டன் தங்கத்துடன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து 7 மற்றும் 8வது இடங்களை சுவிட்சர்லாந்து (1,040.00 டன்), ஜப்பான் (845.97 டன்) ஆகியவை முறையே வகிக்கின்றன. 800.78 டன் தங்கத்துடன் இந்தியா 9வது இடத்தில் உள்ளது. இந்த டாப் 10 பட்டியலில் பத்தாவது தேசமாக 612.45 டன் தங்கத்துடன் நெதர்லாந்து இடம் பிடித்துள்ளது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிந்திருக்க வேண்டியவை

பூமியின் உள் மையத்தின் ரகசியம் அம்பலம்!

பூமியின் உட்புறத்தில் என்ன இருக்கிறது என்ற கேள்விகளுக்கான விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும்போது மேலும் ஆழமாகவும், விரிவாகவும் கேட்கபடுகிறது. கேள்விகள் கேட்பதும் அதற்கான பதிலை தேடுவதும்
அறிந்திருக்க வேண்டியவை

ChatGPTக்குப் போட்டியாக Google எடுத்த அதிரடி நடவடிக்கை

Google நிறுவனம் ChatGPTக்குப் போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வாயிலாகச் செயல்படும் கலந்துரையாடல் செயலியை Google அறிமுகம் செய்யவுள்ளது.

You cannot copy content of this page

Skip to content