புட்டினுக்கு நிபந்தனை : இலக்கு மாறாமல் இருக்கும் ரஷ்யா
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும், இல்லையெனில் மேலும் தாமதங்களையும், அதிக வீரர்களின் தியாகத்தையும் சந்திக்க நேரிடும் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேநேரம் உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியைக் கைப்பற்றுவதில் ரஷ்யா மீண்டும் மீண்டும் தோல்வியடைவதை கேலி செய்துள்ளதுடன், மொஸ்கோ நிர்ணயித்த 15 காலக்கெடுக்கள் தவறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
உக்ரைன் தனது சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்திய தாக்குதல்களால் ரஷ்யா ஒரு ஆழமான எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இது தற்காலிகமாக குறைந்த தரத்திலான பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தி மற்றும் இறக்குமதிக்கு வழிவகுக்கக்கூடும்.
உக்ரைனியப் படைகள், பாலங்கள் மற்றும் கட்டளை மையங்கள் உள்ளிட்ட ரஷ்ய இராணுவ தளவாடங்கள் மீது தீவிரமான தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றன.
அதே நேரத்தில், ரஷ்யத் தாக்குதல்களில் உக்ரைன் முழுவதும், குறிப்பாக டினிப்ரோ, கார்கிவ் மற்றும் சபோரிஷியா ஆகிய இடங்களில் 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் சமாதானத்திற்கான ரஷ்யாவின் நிபந்தனைகள் மாறாமல் இருப்பதாக கிரெம்ளின் மீண்டும் வலியுறுத்தியதுடன், கீவ் நான்கு பிராந்தியங்களிலிருந்து வெளியேற வேண்டும் என்றும், நேட்டோவில் சேரும் தனது திட்டங்களைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.





