செய்தி விளையாட்டு

ஜிம்பாப்வே தொடருக்கான இலங்கையின் பயிற்சியாளர் பதவிகளில் மாற்றங்கள்

இலங்கைக்கான சிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்காக பெயரிடப்பட்டுள்ள தேசிய ஆண்கள் அணியின் பயிற்சியாளர் பதவிகளில் சில மாற்றங்களைச் செய்ய இலங்கை கிரிக்கெட் (SLC) தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் சிம்பாப்வேயுடனான போட்டித் தொடருக்கான இலங்கை அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக இலங்கையின் முன்னாள் வீரர் திலின கண்டம்பியை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தொடருக்கான அணியின் பீல்டிங் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் உபுல் சந்தனா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ஜனவரி 6 ஆம் திகதி தொடங்கும் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் விளையாடும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை, ஜிம்பாப்வே அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகளிலும், ஜனவரியில் டி20 போட்டிகளிலும், கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி