இலங்கை

இலங்கையில் முட்டை விலையில் மாற்றம்

இலங்கையில் கடந்த சில நாட்களாக குறைவடைந்திருந்த முட்டையின் விலை தற்போது மீண்டும் அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

பண்டிகைக் காலத்தினை முன்னிட்டு முட்டையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் 38 ரூபாவாக காணப்பட்ட முட்டையின் விலை தற்போது 55 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்துடன், உள்நாட்டில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவும் பட்சத்தில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலங்களில், கேக் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் உற்பத்திக்காக அதிக அளவில் முட்டைகள் பயன்படுத்தப்பட்டமையினாலேயே முட்டையின் விலை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்