எரிபொருள் விலையில் மாற்றம்!
Sri Lanka Petroleum Corporation announces new fuel prices
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தியமைத்துள்ளது.
இதன்படி ஆட்டோ டீசலின் விலை ஒரு லீட்டருக்கு 25 ரூபாய் குறைக்கப்பட்டு 382 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், பெட்ரோல் 92 ஆக்டேன் விலையும் லீட்டருக்கு 20 ரூபாய் குறைக்கப்பட்டு 414 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சூப்பர் டீசல், பெட்ரோல் 95 ஆக்டேன் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.





