அமெரிக்க பொருட்களை கொள்வனவு செய்வதை தவிர்க்கும் கனேடியர்கள்
Canadian flag waving with Parliament Buildings hill and Library in the background
அமெரிக்காவை கனேடியர்கள் புறக்கணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க பொருட்களை கொள்வனவு செய்வதை கனேடியர்கள் தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அண்மையில் அமெரிக்க புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 வீத வரி விதிக்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து கனேடியர்கள் அமெரிக்க பொருட்களை கொள்வனவு செய்வதனை தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நானோஸ் ஆய்வு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.





