வட அமெரிக்கா

லொட்டரியில் பரிசு விழுந்துள்ளதாக பலரை ஏமாற்றிய கனடிய பெண் கைது

கனடாவின் ஆல்பர்ட்டா மற்றும் மனித்தோபாவில் வாழும் முதியவர்களைக் குறிவைத்து ஏமாற்றும் இளம்பெண் ஒருவர் சிக்கியுள்ளார்.

2022 முதல், ஆறு மாதங்களுக்கு கனடாவின் ஆல்பர்ட்டா மற்றும் மனித்தோபாவில் வாழும் முதியவர்களைக் குறிவைத்து பெண் ஒருவர் மோசடி ஒன்றை அரங்கேற்றியுள்ளார்.

அந்த முதியவர்களை தொலைபேசியில் அழைக்கும் அந்தப் பெண், அவர்களுக்கு லொட்டரியில் பரிசு விழுந்துள்ளதாகக் கூறுவார். மகிழ்ச்சியடையும் அவர்களிடம் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பரிசுத்தொகையைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரு சிறு தொகையைக் கட்டணமாக செலுத்தவேண்டியிருக்கும் என்று கூறுவார் அவர்.

எப்படியும் லொட்டரியில் பரிசு விழுந்த தொகை கிடைக்குமே என்று நம்பி அந்த முதியவர்களும் அந்தப் பெண் கேட்கும் தொகையை அனுப்பிவிடுவார்கள். அவ்வளவுதான், லொட்டரியில் பரிசு விழுந்ததாக கூறப்படும் பணமும் கிடைக்காது, கட்டிய பணமும் போய்விடும்.

இப்படியே ஆறு மாதங்களாக மோசடி செய்து வந்தவர் தற்போது சிக்கியுள்ளார். அவர் ரொரன்றோவைச் சேர்ந்த Abigail Aseani Lindsay (27) என்னும் பெண் ஆவார்.அவரிடம் நடத்திய விசாரணையில், 50,000 டொலர்களுக்கும் அதிகமான தொகையை அவர் பலரை ஏமாற்றி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.ஜூலை மாதம் 31ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content