கனடா தலைமையிலான வங்கியில் சேர பிரித்தானியாவின் புதிய நிதிமைச்சர் ஜான் ஹீலி முனைப்பு
பிரித்தானியாவின் புதிய நிதியமைச்சரான ஜான் ஹீலி (John Healey), பாதுகாப்புத் திட்டங்களுக்கு மலிவான நிதியுதவியைப் பெறுவதற்காக, கனடா தலைமையிலான உலகளாவிய வங்கித் திட்டத்தில் இணைவது குறித்து மறுபரிசீலனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஜான் ஹீலி பாதுகாப்புத் துறைக்குக் கூடுதலாக £18 பில்லியன் பவுண்ட்ஸை திரட்டும் சவாலை எதிர்கொள்கிறார்.
ஆகவே கனடா தலைமையிலான பாதுகாப்பு வங்கியில் சேர முனைப்புக் காட்டி வருகிறார். இதற்கு முன்னாள் டோரி பாதுகாப்புச் செயலாளர்களான சர் கேவின் வில்லியம்சன் (Sir Gavin Williamson ) மற்றும் சர் மால்கம் ரிஃப்கிண்ட் (Malcolm Rifkind) ஆகியோர் நிபந்தனைக்குட்பட்ட ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் உலகளாவிய பாதுகாப்பு வங்கியில் சேருவதற்கான ஹீலியின் விருப்பம், தனது கடுமையான கடன் வாங்கும் விதிகளை மீறும் என்று முன்னாள் நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) கவலைக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தற்போது ஒன்பது நாடுகளை உள்ளடக்கியுள்ள உலகளாவிய பாதுகாப்பு வங்கிக்கு, மூன்று ஆண்டுகளுக்கு இங்கிலாந்துக்கு சுமார் £870 மில்லியன் செலவாகும் என்று ‘தி ஐ பேப்பர்’ கூறுகிறது.
ஆனால், இது பாதுகாப்பு நிறுவனங்களுக்கு நிதியளிக்க வளங்களைத் திரட்டுவதற்கும், மறைமுகமாக இராணுவச் செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கும் ஒரு வழிமுறையை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.




