ஐரோப்பா

பிரித்தானியாவின் நிகர இடப்பெயர்வு உச்சம் தொட்டது!

பிரித்தானியாவில், டிசம்பர் 2022 ஆம் ஆண்டுவரையில் நிகர இடப்பெயர்வு, 6 இலட்சத்து 6 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

நிகர இடம்பெயர்வு என்பது  இங்கிலாந்திற்கு வரும் நபர்களின் வருடாந்திர எண்ணிக்கையாகும்.

தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 2022 இல் மொத்த நீண்ட கால குடியேற்றம்  சுமார் 1.2 மில்லியனாக காணப்பட்டழதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு UK க்கு வருகைத் தந்த பெரும்பாலான மக்களில் European Union ஐ அல்லாதவர்கள் 9 இலட்சத்து 25 ஆயிரமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்தவர்கள் 151000 பேரும், பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள் 88 ஆயிரமாகவும் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் நடந்த போர் மற்றும் ஹாங்காங்கில் அமைதியின்மை உள்ளிட்ட காரணங்களால் இவ்வாறு இடப்பெயர்வு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத சர்வதேச மாணவர்களிடமிருந்தும், அவர்களைச் சார்ந்தவர்களிடமிருந்தும் குடியேற்றத்தின் அளவுகள் அதிகமாக இருப்பதாக புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 19 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content