ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் காதலனின் அதிர்ச்சி செயல் – இந்திய மாணவியை உயிருடன் புதைத்த கொடூரம்

ஆஸ்திரேலியாவில் முன்னாள் காதலியை பழிவாங்க அவரை உயிருடன் மண்ணில் புதைத்துள்ள காதலி தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் தாதியாக பயின்று வந்த மாணவியான ஜாஸ்மின் கவுர் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஆஸ்திரேலியாவின் பிளிண்டர்ஸ் ரேஞ்சஸ் என்ற மலை பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

அவரது முன்னாள் காதலனான தாரிக்ஜோத் சிங் இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

விசாரணையில்அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளது. தாரிக்ஜோத்தும், ஜாஸ்மினும் காதலித்து வந்துள்ளனர்.

பின்னர் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதால் ஜாஸ்மின் அவரை விட்டு பிரிந்து விட்டார். இதை ஏற்று கொள்ள மறுத்த வாலிபர் தாரிக்ஜோத் அவளை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அடெலெய்டில் ஜாஸ்மின் கவுர் படித்து வந்த நிலையில், அவரை அங்கிருந்து கடத்தியுள்ளார். சுமார் 644 கிமீ தூரம் காரை ஓட்டிச் சென்றுள்ளார்.

பிளிண்டர்ஸ் மலைத்தொடரில் கண்களை கட்டி, அங்கிருந்த கேபிள்களை கொண்டு உடலை கட்டி அப்படியே மண்ணில் புதைத்துள்ளார்.

அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், ‘‘அந்த அப்பாவி பெண்ணை அவர் உயிருடன் புதைத்துள்ளார். அந்த பெண்ணுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற ஒரு மரணம் யாருக்கும் வரக் கூடாது. இது முழுக்க முழுக்க பயங்கரமான சம்பவம்’’ என்றார். கடந்த பெப்ரவரியில் தாரிக்ஜோத் மீதான மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது.

இந்த வழக்கில் அடுத்த மாதம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என தெரிகிறது.

 

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித