விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற வங்கதேசம்

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்டில் வங்கதேசம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது.

இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஷான் மசூத், தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் அரை சதம் கடந்தனர்.

வங்கதேசம் அணி சார்பில் மெஹிதி ஹசன் 5 விக்கெட்டும், தஸ்கின் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. பாகிஸ்தான் அணியினர் துல்லியமாக பந்துவீசினர். இதனால் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். ஒரு கட்டத்தில் 26 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்து வங்கதேசம் திணறியது.

இறுதியில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பாகிஸ்தான் சார்பில் குர்ரம் ஷசாத் 6 விக்கெட்டும், மீர் ஹம்சா, ஆகா சல்மான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

12 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆகா சல்மான் 47 ரன்னும், முகமது ரிஸ்வான் 43 ரன்னும் எடுத்தனர்.

வங்கதேசம் சார்பில் ஹசன் மஹ்முத் 5 விக்கெட்டும், நஹித் ரானா 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜாகிர் ஹசன், ஷட்மன் இஸ்லாம் ஜோடி நிதானமாக ஆடியது.

முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த நிலையில் ஜாகிர் ஹசன் 40 ரன்னில் வெளியேறினார். ஷட்மன் இஸ்லாம் 24 ரன்னிலும், கேப்டன் ஷண்டோ 38 ரன்னிலும், மொமினுல் ஹக் 34 ரன்னிலும் அவுட்டாகினர்.

இறுதியில், வங்கதேசம் 2வது இன்னிங்சில் 185 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content