ஐரோப்பா

பிரித்தானியாவில் உணவு பொருட்களின் விலை 50 சதவீதம் வரை அதிகரிக்கும்!

பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலைகள் 50% வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அதிகரித்து வரும் கட்டணங்களால் தவிக்கும் குடும்பங்களுக்கு இந்த விலை உயர்வு மேலும் புதிய அழுத்தத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

எனர்ஜி அண்ட் கிளைமேட் இன்டெலிஜென்ஸ் யூனிட் (ECIU) நடத்திய புதிய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விலை உயர்வு ஒரு “கடுமையான மைல்கல்லை” குறிக்கும் என  மேற்படி ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

காலநிலை மாற்றம், உலகளாவிய விநியோகச் சங்கிலி சீர்குலைவு மற்றும் நிலையற்ற எண்ணெய், எரிவாயு சந்தைகளின் தொடர்ச்சியான தாக்கம் ஆகியவற்றின் கலவையே உணவுப் பணவீக்கத்தை இயக்குகிறது என்று அந்த ஆய்வுக்குழு கூறியுள்ளது.

இதேவேளை பாஸ்தா, உறைந்த காய்கறிகள், முட்டை மற்றும் மாட்டிறைச்சி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 2021-ஆம் ஆண்டிலிருந்து ஏற்கனவே 50 முதல் 64% வரை உயர்ந்துள்ளன, அதே நேரத்தில் ஆலிவ் எண்ணெய் விலைகள் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. .

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்