ஆஸ்திரேலியா ஐரோப்பா

35 ரஷ்ய நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதித்த ஆஸ்திரேலியா

உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டணியான நேட்டோவில் இணைவதற்காக உக்ரைன் முயற்சி செய்து வருகிறது. இதனால் தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது.

இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் களமிறங்கின. அவை உக்ரைனுக்கு ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன. இதன்மூலம் ரஷ்யாவின் தாக்குதலை உக்ரைன் சமாளித்து வருகிறது.

17 மாதங்களை தாண்டி போர் தொடர்ந்து நடைபெறுவதால் இது உலக பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கோதுமை, பார்லி, சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் முக்கிய ஏற்றுமதி மையங்களாக இந்த இரு நாடுகள் இருப்பதால் அவற்றின் விலையும் தாறுமாறாக உயர்ந்தது.இதனால் கருங்கடல் ஒப்பந்தம் மூலம் அந்த தானியங்கள் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

ஆனால் கடந்த 18ம் திகதி இந்த ஒப்பந்தம் காலாவதியானதாக ரஷ்யா அறிவித்தது. இதற்கு ஐ.நா மற்றும் உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன.இந்தநிலையில் ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பவர்கள் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள நாடுகளின் பட்டியலில் தற்போது ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.

அதன்படி ரஷ்யாவில் உள்ள 35 நிறுவனங்கள், முன்னாள் துணை பிரதமர்கள் ஆண்ட்ரே பெலோசோவ், டிமிட்ரி செர்னிஷென்கோ மற்றும் பெலாரசில் உள்ள ராணுவ உயர் அதிகாரிகள் என 10 தனிநபர்களுக்கு பொருளாதார தடை விதிக்கப்பட்டு இருப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி பென்னி வோங் தெரிவித்துள்ளார்.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்