ஆங் சான் சூ கியின் தண்டனை காலம் குறைப்பு!
மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கியின் தண்டனை காலம் ஆறில் ஒரு பங்காகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அவருடைய தண்டனைக் காலம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அனைத்து கைதிகளின் தண்டனைகளும் குறைக்கப்படும் என்று அரசு ஊடகங்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த தகவல் வெளியாகியுள்ளது.
தண்டனைக் காலம் குறைக்கப்பட்டாலும் சூ கி இறக்கும் வரையில் சிறையில் இருக்கும் நிலை ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.
தற்போது 80 வயதாகும் அவர் இன்னும் 18 ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





