விளையாட்டு

Asian Games – இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் தகுதி

ஆசிய விளையாட்டு தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதின.

இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங்கை துவங்கிய வங்காள தேசம் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி துவக்கத்தில் சற்று தடுமாறியது. ஜெய்ஸ்வால் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

எனினும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் திலக் வர்மா ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், இந்திய அணி 9.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இன்று மதியம் நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் அணிகள் மோதின.

இதில் பிரபல பாகிஸ்தான் அணிய ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

நாளை நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

(Visited 4 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content