உலகம் செய்தி

ஈரான் வெளிவிவகார அமைச்சரின் ரஷ்ய பயணம் குறித்து அமெரிக்கா கழுகுப்பார்வை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலைத் தணிக்கும் நோக்கில், ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi தற்போது ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவருக்கு அந்நாட்டு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய பயணத்துக்கு முன்னதாக பாகிஸ்தான் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு ஈரான் வெளிவிவகார அமைச்சர் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் மற்றும் ஜனாதிபதி புடின் உள்ளிட்டோரை அவர் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

அதேவேளை, ஈரான் வெளிவிவகார அமைச்சரின் ரஷ்ய பயணம் தொடர்பில் அமெரிக்கா விசேட அவதானம் செலுத்தியுள்ளது.

ரஷ்யாவிலுள்ள அமெரிக்க ராஜதந்திரிகள் இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளனர் என ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!