புதிய அவதாரம் எடுக்கும் அனுஷ்கா… மிரட்டலான போஸ்டர் வெளியானது…
மாதவன் நடித்த இரண்டு படத்தில் அழகு பதுமையாக வலம் வந்த நடிகை அனுஷ்கா செட்டி, முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி, விஜய்,சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தார்.
திடீரென உடல் எடை கூடியதால் படவாய்ப்பை இழந்த அனுஷ்கா ஷெட்டி அட்டகாசமான கம்பேக் கொடுக்கும் வகையில், காதி படத்தில் மிரட்டலாக நடித்துள்ளார்.
அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
தற்போது அனுஷ்கா ஷெட்டி,மலையாளத்தில் ஜெயசூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘காதி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் உருவாகி வருகிறது. இப்படம் மூலம் அனுஷ்கா ஷெட்டி மலையாளத்தில் அறிமுகமாக உள்ளார்.
இந்நிலையில், ‘காதி’ படக்குழு அனுஷ்கா ஷெட்டி 47வது பிறந்த நாளையொட்டி அவரின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் அனுஷ்கா கையில் சுருட்டை வைத்துக்கொண்டு புகைப்பிடித்தபடி இருக்க, அவரின் கண்களில் கண்ணீர் கலங்கி நிற்கிறது. தற்போது இந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி உள்ளது.
மேலும், அனுஷ்காவின் பிறந்த நாளுக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் நண்பர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.