பொழுதுபோக்கு

பல வருட காத்திருப்பு முடிவுக்கு வந்தது… விஜய்யால் வந்தது நல்ல நேரம்

ஒரு காலத்தில் சாக்லேட் பாய் என கொண்டாடப்பட்ட பிரசாந்த் கடந்த சில வருடங்களாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது அவர் விஜய்யுடன் கோட் படத்தில் இணைந்துள்ளார்.

இதை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் சமீபத்தில் வெளியான முதல் பாடலில் அவருடைய கலக்கல் ஆட்டமும் ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் 5 வருடங்களாக இழுபறியில் இருந்த அவருடைய அந்தகன் தற்போது ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

அந்த வகையில் காமெடி கிரைம் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இதில் பிரசாத்துக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். அதேபோல் கார்த்திக், அவருக்கு ஜோடியாக சிம்ரன், சமுத்திரகனி, ஊர்வசி, யோகி பாபு என பலர் இதில் நடித்திருக்கின்றனர்.

இதற்கு முன்னதாக சிம்ரன் கேரக்டருக்கு ஐஸ்வர்யா ராயை தான் அணுகினார்கள். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்த நிலையில் சிம்ரன் கமிட்டானார். இப்படி உருவான அந்தகன் பலமுறை ரிலீசுக்கு தயாரானது.

ஆனால் சில குளறுபடிகளின் காரணமாக அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. தற்போது பிரசாந்த் விஜய்யுடன் இணைந்து நடிப்பது ஒரு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.

அதனாலயே தியாகராஜன் சூட்டோடு சூடாக இந்த படத்தையும் ரிலீஸ் செய்து விட முடிவெடுத்து இருக்கிறார். அந்த வகையில் அந்தகன் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தேதி இன்னும் முடிவாகவில்லை. விரைவில் அட்டகாசமான டீசரோடு இதை அறிவிப்பதற்கு படக்குழு பிளான் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. எப்படியோ கோட் பட ராசியால் டாப் ஸ்டாரின் படத்திற்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு விடிவுகாலம் வந்துள்ளது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்