பொழுதுபோக்கு

படப்பிடிப்பு தளத்தில் விபத்தில் சிக்கிய அஜித், ஆரவ்… வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித்குமார் துணிவு படத்திற்கு பின் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் சில காரணங்களால் தள்ளிச் சென்று கொண்டே இருக்கிறது.

விடாமுயற்சி அப்டேட் கொடுங்கள் என்று அஜித் ரசிகர்கள் இணையத்தில் கேள்விகளை கேட்டு வந்துள்ள நிலையில், அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா, கடந்த ஆண்டு 2023ல் விடாமுயற்சி படத்திற்காக ஷூட்டிங் வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

அதில் கார் ஓட்டிக்கொண்டிருக்கும் அஜித். பக்கத்து சீட்டில் கழுத்தில் காயத்துடன் ஆரவ் அமர்ந்து வருகிறார்.

அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த கார் சேசிங் காட்சியில் அஜித் டூப் போடாமல் நடித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஆரவ் கைகளை கட்டி வண்டியில் ஏற்றிக்கொண்டு, அஜித் காரில் செல்லும் போது… அஜித் செல்லும் கார் தலைகுப்புற கவிழ்கிறது. இந்த காட்சியில் அஜித் நடித்து முடித்ததும் இயக்குனர் ஓகே என சொல்லியவுடன்…. காரில் உள்ள அஜித் மற்றும் ஆரவ் ஆகிய இருவரையும் மீட்க படக்குழுவினர் பதறியடித்து கொண்டு ஓடுகிறார்கள்.

இந்த காட்சியில் அஜித் எவ்வித டூப்பில் போடாமல் நடித்து மெர்சல் செய்துள்ளார். சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வரும் இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. மேலும் அஜித் இப்படத்திற்காக எடுத்துள்ள ரிஸ்க்கையும் கண் முன் காட்டியுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content