இலங்கை

இராமர் பாலம் அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடாத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் இராமர் பாலம் அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்களும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் சந்தோஷ் ஜா இன்று காலை மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து வழிபட்டார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் ஏந்திரி என்.சிவலிங்கம்,மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர் கொண்டு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

எதிர்வரும் காலத்தில் மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் நோக்கிய ரயில் சேவையினை விஸ்தரிப்பதற்கு எதிர்காலத்தில் இந்தியா நடவடிக்கையெடுக்கும் என்று உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரம் தெரிவித்தார்

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content