நுவரெலியாவில் விபத்து: 28 பேர் காயம்
நுவரெலியா – தலவாக்கலை ஏ7 பிரதான வீதியின் நானுஓயா டெஸ்போட் பகுதியில் இன்று (14) இடம்பெற்ற பேருந்து விபத்தில் 28 பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த பேருந்தும், நுவரெலியாவிலிருந்து அகரபத்தனை நோக்கிப் பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





