இலங்கை

வவுனியா பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நுழைந்த மர்ம நபர்!

வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர் ஒருவர் நுழைந்தமையால் மாணவிகள் மத்தியில் அச்சநிலை ஏற்ப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் இரவு வேளையில் இனம் தெரியாத நபர் ஒருவர் உள்ளாடையுடன் நுழைந்துள்ளார்.இதனால் அங்கிருந்த மாணவி ஒருவர் அச்சமடைந்து கூச்சலிட்ட நிலையில், குறித்த நபர் தப்பிச்சென்றுள்ளார்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி தாயாருக்கு தொலைபேசியூடாக தெரிவித்துள்ளார்.ஏற்கனவே இருதய நோயினால் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் இச்சம்பவம் அறிந்ததை அடுத்து ஏற்பட்ட திடீர் நோய் நிலையால் மரணமடைந்தார்.

குறித்த சம்பவத்தால் மாணவிகள் விடுதியில் இருந்து முற்றாக வெளியேறியுள்ளமையுடன் இவ் அநீதிக்கு எதிரான நீதியினை கோரியுள்ளமையுடன் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஏன் உள்ளனர் என்ற கேள்வியினையும் எழுப்பியுள்ளனர்.

இதேவேளை உள்ளாடையுடன் நுழைந்த நபர் தொடர்பாக கண்காணிப்பு கெமராக்களின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content