தமிழ்நாடு

முற்றிய வாக்குவாதம்… மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்றுவிட்டு விபரீத முடிவெடுத்த கணவன்!

தென்காசி அருகே, குடும்பத் தகராறில் மனைவியை உலக்கையால் கொடூரமாக தாக்கி கொலை செய்திருக்கிறார் ஒரு கணவர். மனைவியை அடுத்துக் கொன்றுவிட்டு பயத்தில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் அந்த மனிதர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் திருவேங்கடம் தெற்கு பாரப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (70). இவரது மனைவி சீதை (65). வயதானாலும் இவர்களுக்கு இடையில் அடிக்கடி சண்டையும் சச்சரவுமாகவே இருந்திருக்கிறது.

இந்த நிலையில், நேற்று இரவு 11:30 மணியளவில் கணவன் மனைவிக்கு இடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிப்போய் கைகலப்பாகி இருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த கருப்பசாமி , வீட்டில் இருந்த உலக்கையால் தனது மனைவி சீதை தலையிலும், வாயிலும் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த சீதை, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Sudden death: Blame it on stress, genes & severe illnesses - Hindustan Times

மனைவியை அடித்துக்க் கொன்ற கருப்பசாமி அச்சத்தில் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கரன்கோவில் பொலிஸார், சீதையின் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை மற்றும் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குடும்பத் தகராறில் மனைவியை கணவரே உலக்கையால் அடித்துக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்

You cannot copy content of this page

Skip to content