முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் படுக்கை அறைக்குள் விழுந்த விண்கல் – தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்

அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் ஒரு வீட்டின் மேற்கூரை மீது விண்கல் தாக்கியுள்ளது.

அது வீட்டின் படுக்கை அறைக்குள் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோப்வெல் டவுன்ஷிப் என்ற இடத்தில் எட்டா அக்வாரிட்ஸ் என்று அழைக்கப்படும் தற்போதைய விண்கல் மழையுடன் தொடர்புடைய கல் ஒன்று விழுந்ததாகக் கூறப்படுகிறது.

Eta Aquariids விண்கல் மழை என்பது ஆண்டுதோறும் நிகழும் ஒரு நிகழ்வு ஆகும். தற்போது வீட்டின் மேற்கூரையைத் துளைத்த அந்தக் கல், படுக்கை அறையில் விழுந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

விண்கல் விழுந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது விழுந்துள்ள இந்தக் கல், ஹாலியின் வால்நட்சத்திரத்தில் உள்ள குப்பைகளில் ஒன்று என்று கண்டறியப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,
இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி

  • April 20, 2023
இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலை காரணமாக மக்களின் நாளாந்த நீர் பாவனை சுமார் 10 சத வீதம் அதிகரித்துள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்