உலகம் செய்தி

ஒரு ஆசனத்தில் ஊசலாடும் ஆட்சி: நியூசிலாந்து தேர்தலில் பெரும் இழுபறி

நியூசிலாந்து பொதுத் தேர்தலில் ஆளும் மத்திய வலதுசாரி தேசியக் கட்சியும் (National Party), பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும் (Labour Party) தலா 30 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளன.

நியூசிலாந்து பொதுத் தேர்தலில் ஆளும் மத்திய வலதுசாரி தேசியக் கட்சியும் (National Party), பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும் (Labour Party) தலா 30 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளன.

இதுவரை 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், தேசியக் கட்சி தலைமையிலான மூன்று கட்சிகளைக் கொண்ட ஆளும் கூட்டணி, நாடாளுமன்றத்தில் ஒரேயொரு ஆசன வித்தியாசத்தில் பெரும்பான்மையைப் பெறும் நிலையில் உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேவேளை, 5 சதவீத வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்குள் நுழையும் நிலையில் உள்ள ஒப்பர்சுனிட்டி கட்சி (Opportunity Party), புதிய அரசாங்கத்தை அமைப்பதில் தீர்மானிக்கும் சக்தியாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடி மற்றும் பல்பொருள் அங்காடிகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவை இத்தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், அனைத்துக் கட்சிகளும் விட்டுக்கொடுப்புகளுடன் இணைந்து செயற்பட வேண்டியிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இரு பிரதான கட்சிகளும் ஏறத்தாழ சமமான பலத்துடன் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தால், ஒப்பர்சுனிட்டி கட்சியின் ஆதரவு ஆட்சியமைப்பதில் முக்கியத்துவம் பெறும் என முன்னாள் அமைச்சர் பீட்டர் டன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக பல வாரங்கள் கட்சிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறலாம் என்பதுடன், கிறிஸ்மஸ் காலத்திற்குள்ளும் நியூசிலாந்தில் புதிய அரசாங்கம் உருவாகாமல் போகும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி