இலங்கை

யாழில் வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்த 5வயது சிறுமி !

காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமியொருவர் வழியிலேயே உயிரிழந்த துயரச் சம்பவம் இன்று (28) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – ஆவரங்கால் கிழக்கைச் சேர்ந்த 05 வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார்.

சில தினங்களுக்கு முன்னர் குறித்த சிறுமி காய்ச்சல் காரணமாக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு சென்று வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் இன்று உடல் நிலை மோசமாகவே பெற்றோர் சிறுமியை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு மீண்டும் கொண்டு சென்ற போதே அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது

பிரேத பரிசோதனைக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்.சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content