Consent Preferences
ஐரோப்பா

இங்கிலாந்து முழுவதும் பனி, உறைபனி எச்சரிக்கை

இங்கிலாந்து மற்றும் மிட்லாண்ட்ஸின் சில பகுதிகளில் அதிக பனிப்பொழிவுக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கையானது பிற்பகல் 2 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கிழக்கு நோக்கி நகரும் கனமழை, ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்தின் உயரமான பகுதிகளில் பனியாக மாறும் என எதிர்பார்க்கப்படுவதுடன், 3 செ.மீ வரை பனிப்பொழிவு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

உறைபனி மழை மற்றும் பனி சூழ்ந்த நிலைமைகள் சாலைகள் மூடப்படுவதற்கும், பொதுப் போக்குவரத்து தடைபடுவதற்கும், வழுக்கி விழுந்து காயங்கள் ஏற்படும் அபாயங்களை ஏற்படுத்துவதால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதேவேளை ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 10°C வரை குறையக்கூடும், எனவும் வட அயர்லாந்தில் உறைபனி தொடர்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்