Consent Preferences
ஐரோப்பா

UKவின் ரோயல் நேவி தலைமையகம் மீது வெடிகுண்டு எச்சரிக்கை

பிரித்தானியாவின் போர்ட்ஸ்மவுத்தில் Portsmouth  உள்ள ரோயல் நேவி தலைமையகமான HMS எக்ஸலண்ட்  HMS Excellent மீது குண்டுதாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கை நேற்று தொலைபேசி வழியாக விடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கையை தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகப் பணியாளர்கள் அந்த தளத்தை முழுமையாக ஆய்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனைகளில் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவசர சேவைகள் பாதுகாப்புச் சம்பவத்தைக் கையாண்டபோது, ​​அப்பகுதியில் சிறிது நேரம் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் விலகி இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

மேலும் தற்போது எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்றும், தளத்தின் செயற்பாடுகள் வழமைபோல் இயங்குவதாகவும் ரோயல் நேவி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்