இலங்கை செய்தி

இலங்கையில் வரவு- செலவுத் திட்ட விவாதம் இன்று முதல் ஆரம்பம்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதன்போது, வரவு செலவுத் திட்டம் தொடர்பான தமது கட்சிகளின் நிலைப்பாடுகள் மற்றும் யோசனைகளை நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளன.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதன்போது, வரவு செலவுத் திட்டம் தொடர்பான தமது கட்சிகளின் நிலைப்பாடுகள் மற்றும் யோசனைகளை நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளன.

இன்றைய விவாதத்தைப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்து வைக்கவுள்ளது.

அக்கட்சியின் சார்பில் பொருளாதார நிபுணர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா அல்லது கபீர் ஹாசீம் ஆகிய இருவரில் ஒருவர் முதலில் உரையாற்றவுள்ளார்.

2027ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை நேற்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சமர்ப்பித்து உரையாற்றினார். இதன்போது ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரை மாத்திரமே இடம்பெற்றது.

இந்நிலையில், நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்குக் கூடவுள்ளது.

இன்று முதல் நவம்பர் 20ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்கு இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளது. நவம்பர் 20ஆம் திகதி பிற்பகல் 6.00 மணிக்கு இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு குழுநிலை விவாதம் நடைபெறவுள்ளது. டிசம்பர் 14ஆம் திகதி பிற்பகல் 6.00 மணிக்கு வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை தினங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து, சனிக்கிழமைகள் உட்பட ஏனைய அனைத்து நாட்களிலும் வரவு செலவுத் திட்ட விவாதங்கள் நடைபெறும். அத்துடன், அனைத்து நாட்களிலும் நாடாளுமன்ற அமர்வு முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகும்.

மேலும், இரண்டாம் வாசிப்பு மீதான விவாதக் காலப்பகுதியில் அரசாங்கத் தரப்புக்கு 60 சதவீதமும் எதிர்க்கட்சிக்கு 40 சதவீதமும் என்ற அடிப்படையில் விவாதத்துக்கான நேரத்தை ஒதுக்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை, குழுநிலை விவாதக் காலப்பகுதியில் அரசாங்கத் தரப்புக்கு 40 சதவீதமும் எதிர்க்கட்சிக்கு 60 சதவீதமும் என்ற அடிப்படையில் நேரம் ஒதுக்கப்படவுள்ளது.

அத்துடன், அமைச்சொன்றின் செலவினத் தலைப்பு தொடர்பில் வாக்கெடுப்பு கோரப்பட்டால், குறித்த வாக்கெடுப்பு அன்றைய தினத்தின் இறுதியில் மாலை 6.00 மணிக்கு நடத்தப்படும்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை